Take a fresh look at your lifestyle.

இளையராஜா இசையில் பாடிய வேடன்- அறிவு

156

இளையராஜா இசையில் பாடிய வேடன்- அறிவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான ரமுத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்துள்ள ‘அரிசி’படத்தில் இடம் பெறும் பாடலுக்காக இளையராஜா இசையில் முன்னணி பாடகர்களான அறிவு மற்றும் வேடன் ஆகியோர் பாடியுள்ளனர்.
விவசாயத்தை பற்றிய பாடல் ஒன்றை இளையராஜா உருவாக்கி இருக்கிறார். அந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத, பிரபல பாடகரான வேடன் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை மோனிகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் பி.சண்முகம், எஸ்.எம். பிரபாகரன், மகேந்திர பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக் கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.