Take a fresh look at your lifestyle.

ஹாலிவுட் படத்தில் வரலட்சுமி சரத்குமார்

50

ஹாலிவுட் படத்தில் வரலட்சுமி சரத்குமார்
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்படும் ஹாலிவுட் படம் ‘ரிசானா-எ கேஜ்ட் பேர்ட்’. இதில் பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன் நடிக்கிறார்.அவரோடு நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருக்கிறார். இதன் மூலம்
முதல்முறையாக ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார்.

இது குறித்து நடிகை வரலட்சுமி கூறுயது, “அகாடமி
விருது வென்ற ஜெர்மி ஐயன்சுடன்
இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.
எனக்கு மிகவும் பிடித்த படம் ‘தி லயன் கிங்’ அந்தப் படத்தில் சிங்கம் ஸ்காட்டுக்கு குரல் கொடுத்தவர் ஜெர்மி. அவருடன் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாவதன் மூலம் என் கனவு நினைவானது என்றார்.