சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ பட கதை இதுதான்!!
‘லக்கி பாஸ்கர் ‘, ‘வாத்தி’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, தற்போது சூர்யா நடிப்பில் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘என்ற என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மமீதா பைஜூ ஹீரோயினாக நடிக்க முக்கிய கேரக்டரில் ரவீனா டான் டான் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் துப்பாக்கி சுடும் வீரராக இருக்கும் சூர்யா 40 வயதிலும் தனது கனவை துரத்துகிறார். அதே நேரம் 20 வயதான மமிதாபைஜு சூர்யாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இந்த வித்தியாசமான கதையுடன் இப்படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
Prev Post