Take a fresh look at your lifestyle.

திவ்யபாரதியின் பர்ஸ்ட் லவ் ஸ்டோரி இது!

105

திவ்யபாரதியின் பர்ஸ்ட் லவ் ஸ்டோரி இது!
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான திவ்யபாரதி அளித்த சமீபத்திய பேட்டியில்,நான் பி.டெக் இறுதியாண்டு படிக்கும் போது ஒருவரை வெறித்தனமாக காதலித்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஒரு பேராசிரியர் என்று தெரிந்தது.வேறு ஒரு துறையில் அவர் பேராசிரியராக இருந்தார்.நான் அவரை பார்த்துக் கொண்டிருந்த போது அவரும் என்னை பார்த்தார். ஒருநாள் திடீரென எனக்கு போன் செய்தார்.இதை தொடர்ந்து நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தோம். ஒருவருக்கொருவர் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் கல்லூரி காலத்திற்கு பிறகு காதல் முறிந்தது.அதன் பிறகு என் முதல் படம் வெளியானதும் என்னை போனில் அழைத்து வாழ்த்தினார்.இப்போதும் அடிக்கடி என்னிடம் பேசுவார் என்றார்.