‘ பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் வித்தியாசமான புரமோ
“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” என்ற எண்ணத்துடன் காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் படம் தான் “ பியார் பிரேமா கல்யாணம்”.இப் படத்தை இயக்குவதுடன் ஹீரோவாகவும் நடித்துள்ளார் இளன். இதில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின் மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக் கிறார். திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான ஆச்சரியங்கள் தொடங்குகி ன்றன என்பதை நகைச்சுவை யுடனும் சொல்ல வரும் இப்படம் ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் வித்தியாசமான புரோமோவை நெட்ஃப்ளிக்ஸில் நிறுவனம் வெளியிட்டுள்ளது
Next Post