Take a fresh look at your lifestyle.

விஜய் மகன் இயக்கும் படத்தின் டைட்டில் சிக்மா

48

விஜய் மகன் இயக்கும் படத்தின் டைட்டில் சிக்மா
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் பிரியா அப்துல்லா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின் றனர். மேலும் ராஜுசுந்தரம், சம்பத் ராஜ், கிரண் கொண்டா,மகாலட்சுமி, சுதர்சனன் உள்பட பலர் நடிக்கின்றனர்.அட்வென்சர், காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. தமன் இசையமைத்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் 65 நாட்கள் நடந்து 95 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில் படத்திற்கு ‘சிக்மா’ என்று டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.படம் பற்றி இயக்குநர் ஜேசன் சஞ்சய் கூறியது, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ளப் படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை,கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் உங்களுக்கு கொடுக்கும் என்றார்.