Take a fresh look at your lifestyle.

கதை நாயகனான காளி வெங்கட்

105

கதை நாயகனான காளி வெங்கட்
பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் மற்றும் சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சரத் பாபு மற்றும் சூர்யா தேவி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்குகிறார். இது இந்நிறுவனத்தின் 3வது தயாரிப்பாகும். இதில் காளி வெங்கட் ஜோடியாக ரேஷ்மா முரளிதரன் நடிக்க, ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன்,மைம் கோபி,விஜே பாரு, ஜெயபிரகாஷ்,வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய,ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். அரசுப்பள்ளியில் படிக்கும்‌ தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் ஒரு தந்தையின் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.