Take a fresh look at your lifestyle.

கதை நாயகனாகும் பூவையார்

116

கதை நாயகனாகும் பூவையார்
அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் “ராம் அப்துல்லா ஆண்டனி”. இந்த படத்தை கிளமென்ட் சுரேஷ் தயாரிக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பூவையார், தன் தனித்துவமான குரலாலும், குணத்தாலும், சுட்டித்தனத்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். பின்னர் வெள்ளித்திரையில் விஜய்யின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடல் பாடியதோடு, விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது அடுத்த கட்டமாக நாயகனாக இப்படம் மூலம் அறிமுகமாகிறார்.