Take a fresh look at your lifestyle.

தீயாக பரவும் பூஜா ஹெக்டேவின் மோனிகா பாடல்

78

தீயாக பரவும் பூஜா ஹெக்டேவின் மோனிகா பாடல்
நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள முக்கிய நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் தற்போது விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடனமாடிய அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய வைரலானது. அதேபோல் சூர்யா உடன் அவர் நடித்த ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற ‘கனிமா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸில் கூட பட்டையை கிளப்பியது .இந்த நிலையில் ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் கூலி படத்திலிருந்து வெளியான ‘மோனிகா’ எனும் பாடலில் சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்த பாடலால் சமூக வலைதளங்களில் பூஜா ஹெக்டே தான் டிரென்டிங் . தற்போது வரை இப்பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்ததுள்ளது.