என் புகழுக்கு காரணம் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல்: ரம்யாகிருஷ்ணன்
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில்
விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன். இது விஜயகாந்தின் 100-வது படமாக ரிலீஸ் ஆகிமிகப் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த படம் 34 ஆண்டுகளுக்கு பிறகு 4கே தரத்திற்கு மாற்றப்பட்டு வரும் 22-ந் தேதி மீ்ண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது. படத்தை ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக்
வெளியிடுகிறார். இதையொட்டி நடந்த
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், ரம்யாகிருஷ்ணன் பேசியது,கேப்டன் பிரபாகரன் படத்தில் 2-வது ஹீரோயின் ஆக தான் நடித்தேன். ஆனால் இதில் இடம் பெற்ற ஆட்டமா தேரோட்டமா பாடல் என்னை மிகப் பெரிய அளவில் பிரபலமடைய செய்தது. பாடலை கொண்டாடுவது போல் இன்றும் என்னை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர் என்றார்.
Next Post
