Take a fresh look at your lifestyle.

சீறிப்பாய்ந்த காளை: சிதறி விழுந்த ஹீரோ

59

சீறிப்பாய்ந்த காளை: சிதறி விழுந்த ஹீரோ
கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘வட மஞ்சு விரட்டு’. இதில் முக்கியமாக மஞ்சுவிரட்டு சார்ந்த காட்சிகள் அதிகம் இருக்கின்றன. இதில் ஹீரோவாக ‘முருகா’ அஷோக் நடிக்கிறார். இப்படத்தை சங்கிலி எழுதி இயக்கியுள்ளார். அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி தயாரிக்கிறார்.இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் அஞ்சு குளிப்பட்டி என்ற இடத்தில் நடந்த போது காளையுடன் ‘முருகா’ அஷோக் நடித்த போது அந்த காளை முரட்டுத்தனமாக அவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர், இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.