கமலை பார்த்து வியக்கும் தயாரிப்பாளர்
நடிகர் கமல்ஹாசன் தற்போது கல்கி 2898 ஏடி படத்தின் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங்கில் பங்கேற்க கமலுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர் தனி
விமானத்தில் செல்வதை தவிர்த்து விட்டு பயணிகள் விமானத்தில் எக்கனாமி வகுப்பில் பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்யும் புகைப்படத்தை பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பகிர்ந்து, திரையுலகம் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் கமல்ஹாசன் தனி விமான பயணம் உள்ளிட்ட ஆடம்பர செலவை குறைத்தது அவர் எத்தகைய ஒரு ஜாம்பவான் என்பதை பறை சாற்றுகிறது. சினிமாவில் இன்னும் பெரிய விஷயங்கள் நடப்பதற்கான முதல் படி இது என குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்.
Prev Post
Next Post