Take a fresh look at your lifestyle.

துருவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்

76

துருவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய சினிமாவில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆருடன் தேவரா படத்தில் நடித்திருந்த ஜான்வி கபூர், ராம்சரணுடன் ‘பெத்தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூன் 4-ந் தேதி திரைக்கு வருகிறது. அடுத்து தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஜான்வி கபூர் அறிமுகமாக இருக்கிறார். துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடிக்க உள்ளார். கதையை கேட்டதும் அவர் நடிப்பதற்கு உடனடியாக சம்மதித்தார். இந்த படத்தை சுதா கொங்ரா இயக்க உள்ளார். பிரமாண்ட ஆக்ஷன் படமாக இது உருவாகிறது.