Take a fresh look at your lifestyle.

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்

113

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்
இயக்குநர் சௌர்யுவ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இது குறித்த அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளியானது. பிரம்மாண்டத்தையும், இலட்சியத்தையும் உலகளாவிய சினிமாவை நோக்கிய ஒரு துணிச்சலான வீறு நடையை யும் குறிக்கிறது. அந்த போஸ்டரில்,விஜய் தேவரகொண்டா உலோக பட்டைகளால் நான்கு நாய்களை பிடித்தபடி முன்னோக்கி நடந்து செல்வது காட்சிப்படுத் தப்பட்டுள்ளது.அவருக்குப் பின்னால் ஏழு பேர் அவருடன் நடந்து செல்கின்றனர். இந்தக் குழு ‘தட்ஸ் எ ரோவர்’ என்ற தலைப்பில் இப்படத்திற்கான ஒரு தீம் பாடலையும் வெளியிட்டுள்ளது. வைரா நிறுவன ஆதரவுடன் உருவாகும் இந்த படத்திற்க்கு அலெக்சாண்டர் மார்ட்டினஸ் ஒளிப்பதிவு செய்ய,ஹேஷாம் அப்துல் வகாப் இசையமைக்கிறார்.