Take a fresh look at your lifestyle.

டேக் ஆஃப் ஆன ‘கட்டா குஸ்தி 2’ படம்

88

டேக் ஆஃப் ஆன ‘கட்டா குஸ்தி 2’ படம்
செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், கடந்த 2022 ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் 2ம் பாகம் தயாராக உள்ளது. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான வேடத்தில் இணைகிறார்.
இப்படத்தின் அறிவிப்பு குறித்து வெளியான ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது. சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக ஷூட்டிங் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.