Take a fresh look at your lifestyle.

யார் இவர் என தேட வைத்த மராட்டிய நடிகை

54

யார் இவர் என தேட வைத்த மராட்டிய நடிகை
மராட்டிய நடிகையான கிரிஜா ஓக் தான் இணையத்தின் சென்சேஷன். சமீபத்திய நேர்காணலில் இருந்து வெளியான ஒரு ஃபோட்டோ இவர் யார் என்ற தேடுதல் வேட்டையை அதிகரித்தது.இவர் மராத்தி மற்றும் ஹிந்தித் திரையுலகில் பிரபல நடிகையாவார்.38 வயதாகும் இவர் மராத்தி நடிகர் கிரிஷ் ஓக்-ன் மகள் ஆவார்.இவர் ‘தாரே ஜமீன் பர்’ , ‘ஷோர் இன் தி சிட்டி’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.ஜீ யில் வெளியான ‘லஜ்ஜா’ என்ற தொடர், சோனியில் வெளியான ‘லேடீஸ் ஸ்பெஷல்’ சீசன் 2 ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளார். இதனால் இவரின் இன்ஸ்டா பாலோயர்களும் கிடுகிடுவென அதிகரித்துள்ளனர்.