ஹாலிவுட் படமான சிசு பார்ட் 2 வருது!
கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஹாலிவுட் அதிரடி திரைப்படம் சிசு. இதன் 2-ம் பாகம் சிசு தி ரோட் டூ ரிவென்ஜ் என்ற பெயரில் உருவாகி உள்ளது.1946-ம் ஆண்டு சோவியத் ஆக்கிரமித்த கரேலியா வுக்குத் திரும்பிய பிறகு, 2-ம் உலகப் போரின் போது ஹீரோ அட்டாமி கோர்பியின் குடும்பம் கொடூரமாக கொல்லப்படுகிறது.தனது பழைய குடும்ப வீட்டை இடித்து,அதை ஒரு லாரியில் ஏற்றி, அவர்களின் நினைவாக பாதுகாப்பான இடத்தில் அதை மீண்டும் கட்ட நினைக்கி றார்.செஞ்சேனை படை தலைவன், கோர்பி தங்கள் இடத்துக்கு வந்ததைக் கண்டறிந்த தும், அவரை கொல்ல திரும்பி வருகிறார். அதை முறியடித்து கோர்பி வீட்டை கட்டினாரா என்பதை ஆக்சன் திரில்லர் கலந்து உருவாகி உள்ளனர்.இந்த படம் வரும் 21-ந் தேதி வெளியாகிறது. சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின் மெண்ட் படத்தை இந்தியா
முழுவதும் வெளியிடுகிறது.
Next Post