Take a fresh look at your lifestyle.

ஹீரோ அவதாரம் எடுக்கும் டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்

122

ஹீரோ அவதாரம் எடுக்கும் டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்
எம்.ஆர்.பி.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனரான அபிஷன்ஜீவிந்த் கதை நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்க இருக்கிறார்.டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இந்த படத்தை இயக்குகிறார்.
படத்தின் பூஜை வருகிற 3-ந் தேதி சென்னை யில் நடக்கிறது. ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் பேமிலி படம் ரூ.100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.
இதனால் திரை உலகின் மொத்தபார்வையும் இயக்குனர் அபிஷன்ஜீவிந்த் மீது விழுந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அவர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.