Take a fresh look at your lifestyle.

ராதிகா நடிக்கும் காலனி

1

ராதிகா நடிக்கும் காலனி
சமீபத்தில் வெளியான ‘தாய்க்கிழவி’ படத்தில் பவுனுத்தாய் என்ற கேரக்டரில் வித்தியாச மான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெற்றவர் நடிகை ராதிகா சரத்குமார்.இதை தொடர்ந்து அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கும் ‘காலனி’ என்ற படத்தில் மாறுபட்ட கேரக்டரில் ராதிகா நடித்துள்ளார். இதில் ராதிகா மகனாக நடிகர் லியோ நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், வினோத் சாகர், மூணார் ரமேஷ், இயக்குநர் தமிழ், ஜானகி கீதா கைலாசம்,போஸ் வெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.நாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றி மாறன் ஆகியோர் வெளியிட்டனர்.