கேடி அழகான மாஸ் ஆக்சன் படம்: ஷில்பா ஷெட்டி
கன்னட இயக்குநர் பிரேம் இயக்கத்தில், துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் கேடி தி டெவில். இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணா தயாரித்துள்ளார். பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ள இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகை ஷில்பா ஷெட்டி பேசியது,
சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. மிஸ்டர் ரோமியோ ஷூட்டிங்கின் போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டேன். கேடி படத்தை பொறுத்தவரை சூப்பரான எமோசன் இருக்கிறது, சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பர் இயக்குநர் என எல்லாமே சூப்பராக அமைந்துள்ளது. கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள், இது அழகான மாஸ் ஆக்சன் படம் என்றார்.
Next Post