தூய்மை பணியாளரைப் பாராட்டியுள்ளார் தலைவர்
தூய்மை பணியின் போது குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவரிடம் சேர்ப்பிக்கச் செய்த நல்லுள்ளம் திருமதி. பத்மா அவர்களை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டியுள்ளார் தமிழ் நாட்டின் தங்கமகன் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தங்க மனசுக்கு தங்கச் செயின் கொடுத்த ரஜினி
தூய்மை பணியின் போது குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த துப்புரவு பணியாளர் பத்மாவை பலர் பாராட்டிய வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை நேரில் அழைத்து
நேரில் அழைத்து 2 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டியுள்ளார். அதோடு அவரின் குடும்பத்தினருடன் போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுபோல் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளும் பரிசுகளும் தங்க மனசு கொண்ட பத்மாவுக்கு குவிந்து வருகிறது.
