Take a fresh look at your lifestyle.

தடயம்- விமர்சனம்

124

தடயம்- விமர்சனம்
அமைதியான ஒரு கிராமத்தில் திடீரென தொடர் மர்மக் கொலைகள் நடக்கிறது.இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து வரும் சப்
இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனிக்கு, மேலதிகா ரிகளின் ஈகோவால் ஓரங்கட்டப்படுகிறார். அதன் பிறகு பெண் இன்ஸ்பெக்டர் ஷிவாதா கொடுக்கும் தன்னம்பிக்கையால் மீண்டும் களத்தில் குதிக்கிறார்.அதன் பிறகு இந்த விசாரணை எங்கு செல்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.
சீருடை இல்லாத போலீஸ் அதிகாரியாக துப்பறியும் சமுத்திரக்கனியின் உடல் மொழியும் நடிப்பும் கதைக்குப் பிளஸ். இன்ஸ்பெக்டராக வரும் ஷிவாதா புன்னகை
கலந்த கம்பீரத்தில் கவனம் ஈர்க்கிறார்.மேலும் மூணாறு ரமேஷ், சுந்தரபாண்டியன்,
ராஜ் திரந்தஸ், புலிப்பாண்டி ஆகியோர் நடிப்பும் ஓகே. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னணியில் சஸ்பென்ஸை மெதுவாக தட்டியெழுப்பும் வகையில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் நவீன் குமார் பழனிவேல். விபின் பாஸ்கரின் இசை, கேகேவின் ஒளிப்பதிவு ரசிக்கவைக்கிறது. இது ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்டிம்மிங் ஆகி உள்ளது.