ஜாக்கி’படத்தின் டீசர் ரிலீஸ்
ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து உருவான ‘மட்டி’ படத்தை வெற்றிகரமாக இயக்கிய டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜாக்கி’.
இதில் யுவான் கிருஷ்ணா,ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 13ம் ஆண்டு வீதி விருது விழாவில் வெளியிடப்பட்டது. டீசரை கண்ட பார்வையாளர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Prev Post
Next Post