விஜய் இயக்கிய ‘காதல் ரீசெட் ரிபீட்’ பட டீசர் ரிலீஸ்
விஜய் இயக்கத்தில், மாலினி மணவை மூவி மேக்கர்ஸ் மற்றும் டீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் அர்ஜுன் அசோகன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் காதலும் உணர்ச்சியும் கலந்த இசை ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்ச் 6 அன்று இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் ரோமியோ பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.