Take a fresh look at your lifestyle.

ஏப்ரல் 23ல் தமிழக சட்டசபை தேர்தல்

19

ஏப்ரல் 23ல் தமிழக சட்டசபை தேர்தல்

புது டெல்லி, மார்ச்:15 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் மே மாதம் 4-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ஆம் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் பங்கேற்கவுள்ள இந்தத் தேர்தலில், வெளிப்படை த்தன்மையைக் காக்க அனைத்து 75,000 வாக்குச்சாவடிகளிலும் 100% நேரடி இணைய ஒளிபரப்பு (Webcasting) செய்யப்படும் என்றும் ஆணையர் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 10-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்பாகவே புதிய ஆட்சி அமைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.