ஆர்யா நடிக்கும் சார்பட்டா – 2 படம் டேக் ஆப்
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் 2021-ல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.தற்போது, பா. இரஞ்சித் சார்பட்டா – 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இது சார்பட்டா பரம்பரை முதல் பாகத்திற்கு முந்தைய கதையாக உருவாகிறது. இதன் காரணமாக, ஆர்யா உடல் எடையைக் குறைத்து இளவயது குத்துச்சண்டை வீரராகவும் நடிக்க உள்ளார்.இந்த நிலையில், தி ஆர்ஜின் ஆஃப் சார்பட்டா – 2 எனப் பெயரிட்ட இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Prev Post
Next Post