சூப்பர் ஹிட்டான சிரஞ்சீவி படம்: முதல் நாளில் ரூ.84 கோடியை அள்ளியது
அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நயன்தாரா கேத்ரின் தெரேசா ஆகியோர் நடிப்பில் மகர சங்கராந்தியை ஒட்டி வெளியான படம் மன சங்கர வரப்பிரசாத் காரு. இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கு காரணம் அணில் ரவிபுடியின் மசாலாவில் வின்டேஜ் சிரஞ்சீவியை திரையில் கொண்டு வந்தது. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சிரஞ்சீவி. படத்துக்காக என்னென்ன வேண்டுமோ அனைத்தையும் செய்கிறார். மாஸ் ஃபைட், க்ளாஸ் டான்ஸ், காமெடி கலாய், ஆங்காங்கே எமோஷன் என கம்ப்ளீட் சங்கராந்தி மீல்ஸ். படம் வெளியான முதல் நாளிலேயே ரூ 84 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததுள்ளது.
