வாணவேடிக்கையில் இணைந்த நட்சத்திர ஜோடி
இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாணவேடிக்கை. இதில் ஹீரோவாக நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் , ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ சி ஆர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பங்களாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 25ஆம் நாள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது படபிடிப்பு தளத்துக்கு தயாரிப்பாளரும் எம்பியுமான எல்.கே. சுதீஷ் சர்ப்ரைஸ் ஆக வந்தார். அப்போது இயக்குனர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்வி ஆகியோர் ஒரு காட்சியை படமாக்கும் விதத்தை கண்டு ரசித்தார். அதோடு ஷூட்டிங் ஏற்பாட்டை பார்வையிட்ட பிறகு படக்குழுவினரோடு உணவருந்தி புகைப்படம் எடுத்துக்கொண் டார். இதில் சண்முக பாண்டியன், ஷிவானி,ஜே பி, சாரா, கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுபிக்ஷா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.
Next Post