சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ல் ரீலீஸ்
சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தமிழ்நாட்டில் திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
Next Post