Take a fresh look at your lifestyle.

எஸ்கே 24 பட இயக்குனர்; விபி-யா? சிபி-யா?

77

எஸ்கே 24 பட இயக்குனர்; விபி-யா? சிபி-யா?
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 5 ம் தேதி வெளியான மதராசி படம் கலையான விமர்சனங்களை பெற்றுள்ளது.இது அவரின் 23 வது படமாகும். அதோடு சுதா கோங்குரா இயக்கும் பராசக்தி படத்திலும் எஸ் கே நடித்துக் கொண்டிருக்கிறார். இது அவரின் 25 வது படாக உருவாகி வருகிறது. மேலும் 24 வது படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப் பட்டது. அதன் பிறகு அவர் மாற்றப்பட்டு வெங்கட் பிரபு இயக்குவார் என தகவல் வெளியானது. இறுதியாக அந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளது உறுதியாகி இருக்கிறது. நவம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது.