Take a fresh look at your lifestyle.

செம யூத்தாக மாறிய சிவராஜ்குமார்

2

செம யூத்தாக மாறிய சிவராஜ்குமார்
கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு,அவர் ஹீரோவாக நடிக்கும் வெல்கம் டு வைல்டு லைஃப் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திருடன் போலீஸ், தெலுங்கில் சந்தீப் கிஷன் நடித்த நினு வீதனி நீ தானு நேனே ‘, சமீபத்தில் வெளியான சிங்கிள் ‘உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பான் இந்தியா படமாக தயாராகிவரும் இதை கேவிகே புரொடக்ஷன்ஸ் சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவராஜ்குமார் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் சிவராஜ் குமார் இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில், இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறார்.