சிவகார்த்திகேயனின் ‘வேலும் மயிலும்’ பாடல்
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது முதல் சுயாதீன இசைப் படைப்பான, ‘வேலும் மயிலும்’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறது.முருகப் பெருமானுக் காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமை த்து,பாடியுள்ளார். பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ‘தாய் கிழவி’ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘சேயோன்’ படங்களின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார். தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி யுள்ள ‘வேலும் மயிலும்’ பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது.
Prev Post