திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்
பராசக்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் டைம் டிராவல் கதையுடன் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது விரைவில் ஷூட்டிங் துவங்க உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் திருச்செந்தூரில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தனது இரண்டு மகன்களுக்கும் நேர்த்திக்கடன் ஆக முடி காணிக்கை செய்து வழிபட்டார். அதன் பிறகு மனைவி, மகள், மகன்களுடன் ராஜகோபுரம் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Prev Post
Next Post