Take a fresh look at your lifestyle.

சிவகார்த்திகேயன் படத்தில் சீமான்

36

சிவகார்த்திகேயன் படத்தில் சீமான்
சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சேயோன்’ இதில் பாக்கிய ஸ்ரீ போஸ் ஹீரோயினாக நடித்து வருகிறார். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். கதை அடுத்த அத்தியாயத்திற்கு முன்னேறுவதோடு, பல முக்கியக் காட்சிகள் எடுக்க உள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிகரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் நடிப்பது உறுதி ஆகி உள்ளது. மதுரையில் நேற்று முதல் தொடங்கியுள்ள இதன் படப்பிடிப்பில் அவர் விரைவில் பங்கேற்க உள்ளார்.