சட்டென்று மாறுது வானிலை- விமர்சனம்
ஐ.டி.கம்பெனியில் பணிபுரியும் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜைன பார்த்தவுடன் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர் அமைச்சரின் மகள் என்பது அதன் பிறகு தான் ஜெய்க்கு தெரிகிறது. இதனால் அமைச்சர் தரப்பினர் இருவரையும் தேட, இவர்கள் கொடைக்கானலுக்கு ஹனிமூன் சென்று விடுகின்றனர். அங்கு கருடன் ராம் நடத்தி வரும் ரிசாட்டில் தங்குகும் ஜெய், மீனாட்சி இருவரும் ஒரு பெரிய பிரச்சனைகள் மாட்டிக் கொள்கின்றனர். அது என்ன பிரச்சனை? அதிலிருந்து எப்படி மீண்டனர்? என்பதே படத்தின் மீது கதை.
படம் முழுவதும் விஜய் ரசிகராக வரும் ஜெய், ஒவ்வொரு பிரேமிலும் விஜய்யை போலவே தெரிகிறார். ஹீரோயின் உடன் ரொமான்ஸ் காட்சிகளில் தாராளமாக நெருக்கம் காட்டி நடித்துள்ளார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் மீனாட்சி கோவிந்தராஜனும் ஒரு படி இறங்கி நடித்துள்ளார். வில்லத்தனத்தில் கருடன் ராம் மற்றும் அஜய் மிரட்டி உள்ளனர். கிரே ஸ்ஷேடுடன் நடித்துள்ள யோகி பாபு வின் டைமிங் காமெடி ரசிக்க வைக்கிறது.
பார்த்து பார்த்து சலித்து போன பழைய சைபர் கிரைம் கதையை புது ஃபிளேவரில் கமர்ஷியல் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் பாபு விஜய். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசை மற்றும் ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
Prev Post
Next Post
