Take a fresh look at your lifestyle.

கிரிக்கெட் வீரருடன் ஸ்ரீலிலா காதலா ?

86

கிரிக்கெட் வீரருடன் ஸ்ரீலிலா காதலா ?
தெலுங்கில் பகவந்த் கேசரி திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஸ்ரீலீலா, தமிழில் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் அனுராக் பாசு இயக்கும் படத்திலும், தமிழில் தனுஷ் 55 திரைப்படத்திலும் ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான திலக் வர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங் செய்வதாகவும் ரெடிட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்துகளை பரிமாறி வருகின்றனர்.சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், ஸ்ரீலீலாவின் தாய் ஸ்வர்ணலதா அமர்ந்திருந்த போட்டோவை சிலர் மேற்கோள்காட்டி, திலக் வர்மாவை ஸ்ரீலீலா காதலிப்பதன் அடிப்படையிலேயே அவரின் தாயாருக்கு அந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளனர். ஆனால் இது தொடர்பாக அவர்கள் இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.