Take a fresh look at your lifestyle.

விண்டேஜ் லுக்கில் சந்தானம்

80

விண்டேஜ் லுக்கில் சந்தானம்
இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தி ல்,சந்தானம் நடிப்பில் உருவாகும் அவரது 20-வது படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன் மென்ட் மற்றும் கே 7 ஸ்டுடியோஸ் சார்பில் கே. ஜே. கணேஷ் மற்றும் விஜய் கே செல்லையா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.மர்மம் – சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றுடன் துப்பறியும் கதையாக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கியமான பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது.இதில் சந்தானம் விண்டேஜ் லுக்கில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடிக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் மற்றும் பௌஸி உட்பட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார்.