சமந்தா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்
சமந்தா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘மா இன்டி பங்காரம்’. இப்படத்தை பி.வி.நந்தினி இயக்கியுள்ளார். இதில், கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூன் 19ம் தேதி வெளியாக உள்ளது.1980 களின் காலகட்டங்களில் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சமந்தா தைரியமான பெண்ணாகவும், பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் பெண்ணாகவும் நடித்திருக்கிறார். பல அதிரடியான காட்சிகளைக் கொண்ட இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
Next Post