செம ஹாப்பி மூடில் சாய் பல்லவி
தமிழில் அமரன் படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நாகசைதன்யாவுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்தார் சாய் பல்லவி. அதன் பிறகு ஹிந்தியில் ஏக் தின் என்ற படத்தில் கமிட்டானார்.
இது அவரின் முதல் பாலிவுட் படமாகும். இதில் அமீர்கானின் மகன் ஜூனைத்கானுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். லவ் சப்ஜெக்ட் ஆன இந்த படத்தை சுனில் பாண்டே இயக்கி உள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் நவம்பர் 7-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.. இந்த படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ராமாயணா படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார் சாய் பல்லவி.

