‘ரவுடி ஜனார்தனா’ வாக் மாறிய விஜய் தேவரகொண்டா
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி காரு’ மூலம் பாராட்டுகளைப் பெற்ற ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை,தில் ராஜுமற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் டைட்டில் டீசர் ஹைதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. ‘ரவுடி ஜனார்த்தனா’ என்ற டைட்டில், டீசர் வெளியிடப்பட்டது.விஜய் தேவரகொண்டா வின் கடுமையான தோற்றம், அற்புதமான வசன உச்சரிப்பு மற்றும்அதிரடியான நடிப்பு ஆகியவை படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை மற்றும் ஆனந்த் சி. சந்திரனின் ஒளிப்பதிவு, சுப்ரீம் சுந்தரின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கும்.
Next Post