Take a fresh look at your lifestyle.

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி

283

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடிகை ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் விதார்த், லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.படம் பற்றி கே.எஸ்.அதியமான் கூறியது,“ஒரு அம்மா – பையன், ஒரு கணவன் – மனைவி, ஒரு காதல் இவற்றை சுற்றி நடக்கின்ற உண்மைக்கு நெருக்கமான கதை இது. அனைவராலும் உணர்ப்பூர்வமாக இந்த கதையை தங்களுடன் தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள முடியும் என்றார்.