Take a fresh look at your lifestyle.

ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’

1

ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தற்போது அப்பா,மகள் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான ‘இருமுடி கட்டு’ என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. இதில் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசாலா லக்ஷ்மண், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வாணா இயக்குகிறார். படத்திற்கு விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் கிளிப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகிறது.