தனுஷ் மருமகன் ஹீரோ: குஷ்பு மகள் ஹீரோயின்
நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் நடிகை குஷ்பூ, இயக்குனர் சுந்தர் சி யின் இளைய மகள் அவந்திகா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் “அட்டாக்கர்”. இந்தப் படத்தை சினிமா மீடியா என்டர்டைன் மென்ட் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இயக்குநர் பா. இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.வாலிபால் விளையாட்டையும் அதனுடன் தொடர்புடைய கலாச்சார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் நடித்துள்ளனர். இதில் நடிப்பதற்காக பவிஷ் மற்றும் அவந்திகா இருவரும் ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழில்முறை வாலிபால் வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Prev Post
Next Post