ராம் இன் லீலா பர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர்
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கி வரும் படம் ‘ராம் இன் லீலா ‘.இதில் ரியோ, வர்திகா ஜோடியாக நடித்த, நயனா எல்சா, மா.கா.பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட்,சூப்பர் சுப்பராயன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய,அங்கித் மேனன் இசையமைக்கிறார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெ யின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் இணைந் து தயாரிக்கின்றனர்.சென்னையில் நடந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை போஸ்டராக வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து சொல்லி உள்ளனர்.
Prev Post
Next Post