ரஜினியின் ஜெயிலர் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு :
இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்-2’.இதில் முதல் பாகத்தில் நடித்த , ரம்யா கிருஷ்ணன், மோகன் லால் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட புது நடிகர்களும் நடித்து உள்ளனர். அதோடு கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தின் ரிலீஸ் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது அதன்படி அக்டோபர் 15 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
Next Post