பரிசு -விமர்சனம்
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆடுகளம் நரேன் மகளான ஜான்விகா, என்ஜினீயரிங் படிக்கும் போதே விளையாட்டில் தீவிர ஆர்வம் உடையவர். அப்பாவை போல் ராணுவத்தில் சேர விரும்பி துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெறுகிறார். இந்த நிலையில் சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்.அப்போது அவரிடம் ஒரு பென்டிரைவ்
கிடைக்கி றது. அதில் பல அதிர்ச்சியான விஷயங்கள் இருக்கிறது. அந்த பென்டிரைவில் இருந்தது என்ன?
ஜான்விகாவின் ராணுவ கனவு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
பெண்களின் தன்னம்பிக்கை மற்றும்ஜதைரியத்தை மையமாக கொண்டு ஒரு விழிப்புணர்வு படமாக இதை இயக்கியுள்ளார் கலா அல்லூரி. விமன் சென்ட்ரிக் படமான இதில் மொத்த கதையையும் தன் தோளில் சுமந்துள்ளார் ஜான்விகா. அவரை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டரில் கிரண்பிரதாப் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் ஜெய்பாலா, மனோ பாலா, சின்ன பொண்ணு, சென்ட்ராயன் ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைக்க முயன்று உள்ளனர். ஆடுகளம் நரேன்,சுதாகர் வரும் காட்சிகள் பலம். ராஜீஷ் இசை மற்றும் சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு படத்தை ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது.
Prev Post
Next Post