காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் அக்கட்சியின் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கள நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல்.
ஆட்சியில் பங்கு தமிழகத்துக்கு ஒத்துவராது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.