Take a fresh look at your lifestyle.

ப்ராமிஸ் பட விழாவில் ஜனநாயகன் பட விவகாரத்தைப் பேசிய பேரரசு

97

ப்ராமிஸ் பட விழாவில் ஜனநாயகன் பட விவகாரத்தைப் பேசிய பேரரசு
அருண்குமார் சேகரன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ப்ராமிஸ்’. அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் நதியா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில், இயக்குனர் பேரரசு பேசும் போது, ‘ ஒரு படம் சென்சார் பிரச்சினையில் இத்தனை நாள் இழுத்துக் கொண்டிரு ப்பது என்பதைக் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. ஆட்சேபனை காட்சிகளை கட் பண்ண முடியாது என்று சொன்னால் தான் பிரச்சினை. ஜனநாயகன் படத்தில் என்ன பிரச்சினை? நீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்க வில்லை.இது ‘ஜனநாயகன்’ படத்திற்கும், விஜய் படத்திற்கும் இருக்கின்ற பிரச்சினை தான் என்று மற்றவர்கள் சும்மா இருக்கக் கூடாது. நாளை நமக்கும் வரும். எனவே இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்’ என்றார்.