Take a fresh look at your lifestyle.

பராசக்தி படம் ரிலீஸ் தேதி மாற்றம்.. ஜனநாயகனுடன் போட்டி!

141

பராசக்தி படம் ரிலீஸ் தேதி மாற்றம்.. ஜனநாயகனுடன் போட்டி!

இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள “பராசக்தி” படம் ஜனவரி 10ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஜனவரி 14ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 10ம் தேதி சனிக்கிழமை இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பராசக்தி படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அதேபோல் ஜனநாயகன் படத்திற்கான தியேட்டர் விநியோக உரிமையை ஏரியா வாரியாக 5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.