Take a fresh look at your lifestyle.

நிவின் பாலியின் 50-வது படம் ‘விஜயம்’

12

நிவின் பாலியின் 50-வது படம் ‘விஜயம்’
மலையாள திரை உலகில் முன்னணி இயக்குனராக உள்ள அல்போன்ஸ் புத்திரனும், நடிகர் நிவின் பாலியும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைகோர்த்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி தங்களின் அடுத்த வெற்றிப் படைப்பிற்காக மீண்டும் இணைந்துள்ளது. அதோடு நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் 50-வது படமாக ‘விஜயம்’ உருவாகிறது. ரேசிங்-ஐ பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை பாலி ஜூனியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சினிஹோலிக்ஸ் பேனரின் கீழ் டன்சன் டோனி மற்றும் சுனில் ராமடி ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்திற்கு ஸ்டீவ் கோட்டூர் இசையமைக்கிறார்.